» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மிசோரத்தில் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கிறது சோரம் மக்கள் இயக்கம்!

திங்கள் 4, டிசம்பர் 2023 4:15:52 PM (IST)

மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைக்கிறது.

40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டசபைக்கு கடந்த மாதம் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 21 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி செய்கிறது. அம்மாநில முதல் மந்திரியாக ஜொராம்தங்கா செயல்பட்டு வருகிறார். அதேவேளை, சோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை முக்கிய எதிர்க்கட்சிகளாக திகழ்கின்றன.

இதனிடையே, மிசோரம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம் கட்சி 27 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையுடன் மிசோரத்தில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக சோரம் மக்கள் இயக்கம் கட்சி தலைவர் லால்டுஹொமா பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. மேலும், பாஜக 2 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory