» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெலங்கானாவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை!

செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:41:24 PM (IST)

தெலங்கானாவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானாவில் ஆளும் பாரதீய ராஷ்டிரிய சமிதியை வீழ்த்தி காங்கிரஸ் முதல் முறையாக தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. தெலங்கானாவில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ்  சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ராகுல் காந்தி அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, கர்நாடக மாநில துணை முதல்வர்  டி.கே.சிவகுமார் மற்றும் தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்கரே உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory