» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி - ஆனி ராஜா வேட்பு மனு தாக்கல்!

புதன் 3, ஏப்ரல் 2024 3:42:43 PM (IST)



வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. கேரளாவில் ஏப்ரல் 26-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜக. உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. நாளை (ஏப்ரல் 4) மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். இந்த நிலையில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். தொண்டர்களுடன் வாகன பேரணியாக சென்ற, ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார். கடந்த 2019 தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். தற்போதைய வயநாடு எம்.பி. ராகுல்காந்திக்கு எதிராக ஆனி ராஜா களம் காண்கிறார். ஆனி ராஜா இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கிறார். கடந்த 2019 தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory