» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசியல்வாதி கொலை செய்தால் கைது செய்யாமல் இருக்க முடியுமா? அமலாக்கத் துறை

புதன் 3, ஏப்ரல் 2024 4:59:36 PM (IST)

அரசியலில் இருக்கும் ஒருவர், தேர்தலுக்கு 2 நாள்கள் முன்பு கொலை செய்தால் கைது செய்யாமல் இருக்க முடியுமா? என அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியிருக்கிறது.

அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், உடனடியாக தன்னை விடுவிக்கக் கோரியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தொடர்ந்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையில் நிறைவில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

முன்னதாக, விசாரணையின்போது, தேர்தல் நேரத்தில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியாமல், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மீது அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் அமலாக்கத்துறை, டெல்லி கலால் கொள்கை முறைகேட்டில், அரவிந்த் கேஜரிவால்தான் முக்கியக் குற்றவாளி, குற்றச்செயலில் முதன்மையாக இருந்து செயல்பட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து, அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு 2 நாள்கள் முன்பு ஒரு கொலை செய்தால், அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? என அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. மேலும், நீதிமன்றத்தில், அரவிந்த் கேஜரிவால் தவறான தகவல்களை அளிக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், இந்த முறைகேடு வழக்கில், எங்களிடம் வாட்ஸ்-ஆப் பேச்சுகள், ஹவாலா செயல்பாடகள் போன்ற ஆதாரங்கள் உள்ளன. நாங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த கைது நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. எங்களிடம் தேவையான அளவுக்கு வருமானவரித்துறை தரவுகளும் இருக்கின்றன என்று அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory