» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி :சகோதரர் கைது!

வியாழன் 11, ஏப்ரல் 2024 5:27:29 PM (IST)பிரபல கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்ததாக அவரது சகோதரரை  மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். 


இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஹார்திக் பாண்டியா. தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவரது உடன் பிறந்த சகோதராரான குர்ணல் பாண்டியா லக்னௌ அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில், இவர்களது பெரியப்பா மகன் வைபவ் பாண்ட்யாவை மும்பை போலீசார் கைது செய்தனர்.

ஹர்திக், குர்னால் மற்றும்  அவர்களது பெரியப்பா மகன் வைபவ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கடந்த 2021ம் ஆண்டில் நிறுவனம் ஒன்றை துவங்கி உள்ளனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கிடைக்கும் லாபத்தில் ஹர்திக், குர்னால் பாண்ட்யாவுக்கு தலா 40 சதவீதமும், வைபவிற்கு 20 சதவீத லாபமும் பிரித்துக் கொள்ள வேண்டும். 

ஆனால், வைபவ் பாண்ட்யா கிடைத்த லாபத்தை பிரித்துக் கொடுக்காமல், மற்றொரு நிறுவனத்தை துவக்கி அதில் அனைத்து பணத்தையும் முதலீடு செய்துள்ளார். இது தொடர்பாக ஹர்திக் பாண்ட்யா அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வைபவ் பாண்ட்யாவை கைது செய்தனர். அவர் மீது மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory