» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
சனி 13, ஏப்ரல் 2024 5:26:40 PM (IST)
ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டப்பேர வைத் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி அடைந்த ஜம்மு-காஷ்மீரைஉருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீர் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு உள்ளது. ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீரில் தற்போது கல்வீச்சு சம்ப வங்கள் நடைபெறவில்லை. அமர்நாத் யாத்திரை அமைதியாக நடைபெறுகிறது. காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும். அதோடு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலும் விரைவில் நடத்தப்படும்.
ஆட்சி, அதிகார ஆசைக்காக சிலர் 370-வது சட்டப்பிரிவை ஆதரித்தனர். மக்களின் ஆசியுடன் அந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இந்த நேரத்தில் ஒரு சவாலை விடுக்கிறேன். காங்கிரஸ் கட்சியால் மீண்டும் 370-வது சட்டப்பிரிவை கொண்டு வர முடியுமா? இதற்கு அந்த கட்சி பதில் அளிக்க வேண்டும்.
காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் மிகப்பெரிய மாளிகைகளில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பகவான் ராமர் கூடாரத்தில் இருந்தார். இந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு உள்ளது. மக்களின் 500 ஆண்டு கால கனவு, நனவாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)
