» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நாணயம் : மத்திய அரசு அனுமதி
புதன் 10, ஜூலை 2024 11:19:52 AM (IST)
முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான திமுகவின் தலைவருக்காக 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நாணயத்தை கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் கடந்த ஜூன் 3-ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது. இந்நிலையில் நேற்று நாணயத்திற்கான அனுமதி கோப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையொப்பம் இட்டதாகத் தெரிகிறது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதலமைச்சர் 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் இந்த நாணயத்தில் இடம் பெற உள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியாக உள்ளது. இதற்கான மாதிரி வடிவத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழிலதிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று மகன் தற்கொலை: குடிபோதையில் வெறிச்செயல்!
புதன் 5, நவம்பர் 2025 12:15:26 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு: மம்தா தலைமையில் பேரணி!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:43:30 PM (IST)

பொங்கல் பண்டிகைதோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதியுதவி: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:01:41 PM (IST)

அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 சகோதரிகள் உயிரிழப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 11:26:18 AM (IST)

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு: விரைவில் விசாரணை!
செவ்வாய் 4, நவம்பர் 2025 10:39:28 AM (IST)

தெரு நாய்கள் வழக்கில் நவம்பர் 7ம் தேதி தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு
திங்கள் 3, நவம்பர் 2025 12:48:51 PM (IST)




