» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
லோகோ பைலட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்: ரயில்வே அமைச்சர் விளக்கம்
புதன் 10, ஜூலை 2024 3:46:53 PM (IST)
லோகோ பைலட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் "லோகோ பைலட்டுகள் ரயில்வே குடும்பத்தின் முக்கியமான உறுப்பினர்கள். லோகோ பைலட்டுகளின் பணி நேரம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. அவசர காலங்களில் மட்டுமே லோகோ பைலட்டுகளின் பணி நேரம் சற்று அதிகமாக இருக்கும்.லோகோ பைலட்டுகளுக்கு பயணங்களுக்கு பிறகு ஓய்வு கொடுக்கப்படுகிறது. சராசரியாக ஜூன் மாதத்தில் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே பணி நேரம் உள்ளது. 2014க்கு பிறகு ரயில்களில் ரயில் ஓட்டுநர் அறை உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஆள் சேர்ப்புப் பணிகள் முடிந்து 34,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
லோகோ பைலட்டுகளின் பணி நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதை விமர்சிக்கின்றனர். போலிச் செய்திகளால் ரயில்வே குடும்பத்தை சீரழிக்கும் முயற்சி தோல்வியடையும். லோகோ பைலட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர். நாட்டிற்கு சேவை செய்வதில் அனைத்து ரயில் நிர்வாகமும் ஒன்றுபட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)


