» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வயநாட்டில் 4 நாளுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு: உறவினர்கள் மகிழ்ச்சி
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 5:25:27 PM (IST)

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 4 நாட்களுக்கு பிறகு 4 பேரை ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, அட்டமலை உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மீட்பு பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் படையுடன் ராணுவ வீரர்களும் ஈடுபட்டு உள்ளனர். சூரல்மலையில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள படவெட்டி குன்னு என்ற இடத்தில், வசித்து வந்த 4 பேரை காணவில்லை என அவர்களது உறவினர்கள் ராணுவத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து இலகு ரக ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் வசித்த வீட்டிற்கு சென்று தேடினர். அப்போது, இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சேற்றில் சிக்கிக் கொண்டு காயத்துடன் உயிருக்கு போராடியது தெரியவந்தது. அவர்களை மீட்ட ராணுவ வீரர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களுக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டது உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சி அளித்து உள்ளது. இதனிடையே, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்து உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாராசிட்டமால் 650 உள்பட 14 வகை மாத்திரை, மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை!
வியாழன் 26, ஜூன் 2025 3:32:39 PM (IST)

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் : பிரதமர் மோடி வாழ்த்து
புதன் 25, ஜூன் 2025 5:17:32 PM (IST)
