» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நம்பிக்கையை தகர்த்துவிட்டீர்கள்: நிர்மலா சீதாராமன் மீது இன்போசிஸ் முன்னாள் சிஎஃப்ஓ குற்றச்சாட்டு!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 10:30:58 AM (IST)
நீண்டகால மூலதன ஆதாய வரியை உயர்த்தி மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டீர்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பை விமர்சித்துள்ளார்.
2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், பங்கு தொடர்பான குறுகியகால மூலதன ஆதாய வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.இந்நிலையில், இந்த அறிவிப்பை மோகன்தாஸ் பை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உங்களது (சீதாராமன்) சிந்தனையற்ற செயலால் மக்களின் நம்பிக்கையைத் தகர்த்துள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியை டேக் செய்த அவர், "மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மூலதன ஆதாய வரி உயர்வால் நடுத்தர மக்கள் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளனர். எனவே, அந்த அறிவிப்பை நீங்கள் திரும்பப் பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா மத்தியஸ்தம்? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
வியாழன் 1, ஜனவரி 2026 11:24:39 AM (IST)

அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
புதன் 31, டிசம்பர் 2025 8:43:39 PM (IST)

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்
புதன் 31, டிசம்பர் 2025 12:11:35 PM (IST)

கட்டுப்பாட்டை இழந்து அரசுப்பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு: மும்பையில் சோகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:26:02 PM (IST)

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள் : அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:59:28 AM (IST)

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:57:11 AM (IST)


