» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நகைக்காக ‘சயனைடு’ கொடுத்து 4 பேர் கொலை: தாய்-மகள் உள்பட 3 பேர் கைது!
ஞாயிறு 8, செப்டம்பர் 2024 11:31:38 AM (IST)

ஆந்திராவில் குளிர்பானத்தில் ‘சயனைடு’ விஷத்தை கலந்து கொடுத்து 4 பேரை கொன்ற தாய்-மகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி பகுதியை சேர்ந்தவர் நாகூர் பீ. இவர் கடந்த ஜூன் மாதம் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்து இருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தெனாலி போலீசார், நாகூர் பீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது அந்த பெண் ‘சயனைடு’ என்ற கொடிய விஷம் கொடுத்து கொல்லப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதேபோல் அடுத்தடுத்து 2 பெண்களும், ஒரு ஆணும் கொலை செய்யப்பட்டனர். இந்த தொடர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 3 பெண்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்படி முனகப்பா ரஜினி (40), மடியாலா வெங்கடேஸ்வரி (32), அவருடைய தாய் ரமணம்மா (60) ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கு இந்த கொலைகளில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், வெங்கடேஸ்வரி உள்ளூரில் தன்னார்வலராக பணியாற்றியுள்ளார். பின்னர் கம்போடியா நாட்டுக்கு சென்று வேலை பார்த்துள்ளார். அங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் நாடுகடத்தப்பட்டார். பின்னர் குண்டூர் திரும்பிய அவர் தனது தாய் ரமணம்மா மற்றும் முனகப்பா ரஜினி ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர்கள் வீடுகளில் தனியாக இருப்பவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள்.
சரியான நேரம் பார்த்து வீட்டில் இருப்பவர்களுக்கு, குளிர்பானத்தில் ‘சயனைடு’ விஷத்தை கலந்து கொடுத்து அவர்களை கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்து இருக்கும் நகைகள் மற்றும் வீட்டில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுவிடுவார்கள். இப்படித்தான் நாகூர் பீ உள்ளிட்ட 4 பேரையும் அவர்கள் தீர்த்துக்கட்டினர் என்பதும் தெரியவந்தது. கைதான 3 பேருக்கும் வேறு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை: பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:09:32 AM (IST)

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

இது தான்Sep 8, 2024 - 01:54:31 PM | Posted IP 162.1*****