» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சர்வதேச விண்வெளி மையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்!

வெள்ளி 20, செப்டம்பர் 2024 4:35:40 PM (IST)



நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பிறந்த நாள் கொண்டாடினார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து, ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் ஜூன் 6-ல் சர்வதேச விண்வெளி சென்ற விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களை ஏற்றி சென்ற, போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை விட்டுவிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு வந்தடைந்தது. அவர்களை பூமிக்கு பத்திரமாக மீட்டு வர பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனது 59வது பிறந்தநாளை நேற்று (செப்.,19) நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.தற்போது தனது மூன்றாவது விண்வெளிப் பயணத்தில் இருக்கும் மூத்த விண்வெளி வீரர் சுனிதா, பல்வேறு விண்வெளி ஆய்வு திட்டத்தில் விடாமுயற்சியுடன் பணியாற்றினார். அவர் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் அடுத்த பிறந்தநாளை பூமியில் வைத்து கொண்டாடி மகிழ்வார் என சமூகவலைதளத்தில் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, கடந்த 2012ம் ஆண்டில் விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் அவரது பிறந்தநாளை அங்கு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory