» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திருப்பதி லட்டு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: ரோஜா
செவ்வாய் 1, அக்டோபர் 2024 12:05:19 PM (IST)
திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "இந்துக்களை ஜெகன் மோகன் ரெட்டியிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, திருப்பதி லட்டுவை கூட உபயோகித்துக்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் இந்த விவகாரத்தில் உண்மை வெளிவரும்.இந்த விவகாரத்தை விசாரிக்க சந்திரபாபு நாயுடு அமைத்த சிறப்புக்குழு மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அதன்மூலம் உண்மை வெளிவர வேண்டும். புனிதத்தன்மையோடுதான் திருப்பதி லட்டு இருக்கிறது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பக்தர்களின் பக்தி பூர்வமான உணர்ச்சிகளோடு விளையாடியவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்களின் ஆபாச ஏஐ வீடியோ, படங்களை நீக்க வேண்டும்: எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு கெடு!
சனி 3, ஜனவரி 2026 3:37:12 PM (IST)

இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனை வேலுநாச்சியார்: பிரதமர் மோடி புகழாரம்!
சனி 3, ஜனவரி 2026 11:06:20 AM (IST)

மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த விவகாரம்: உயிரிழப்பு 11 ஆக உயர்வு!
வெள்ளி 2, ஜனவரி 2026 5:05:35 PM (IST)

துரந்தர் திரைப்படத்திற்கு லடாக்கில் வரி விலக்கு : ஆளுநர் கவிந்தர் குப்தா அறிவிப்பு
வெள்ளி 2, ஜனவரி 2026 3:47:34 PM (IST)

நாடு முழுவதும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்.
வெள்ளி 2, ஜனவரி 2026 12:29:19 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா மத்தியஸ்தம்? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
வியாழன் 1, ஜனவரி 2026 11:24:39 AM (IST)


