» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தாஜ்மகாலின் அழகை வார்த்தைகளால் வர்ணிப்பது கடினம்: முய்சு புகழாரம்

செவ்வாய் 8, அக்டோபர் 2024 3:44:34 PM (IST)



காதல், கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டான தாஜ்மகாலின் மயக்கும் அழகை வார்த்தைகளால் வர்ணிப்பது கடினம் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 4 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 6-ந்தேதி இந்தியா வந்தார். மனைவி சஜிதாவுடன் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார். அதனை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்வு, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து முகமது முய்சு பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாலத்தீவின் அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு முகமது முய்சு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி மற்றும் மந்திரிசபை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முகமது முய்சு இந்தியாவிற்கு வந்திருந்தார்.

இந்நிலையில், முகமது முய்சு தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமான தாஜ்மகாலுக்கு தனது மனைவியுடன் வருகை தந்தார். அவரை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சார்பில், மாநிலம் மந்திரி யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார். தொடர்ந்து தனது மனைவியுடன் தாஜ்மகாலை பார்வையிட்ட முகமது முய்சு, அங்கு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அவரது வருகையை முன்னிட்டு தாஜ்மகாலில் இன்று காலை 8 முதல் 10 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தாஜ்மகாலை பார்வையிட்ட பிறகு முகமது முய்சு பார்வையாளர்கள் புத்தகத்தில், "தாஜ்மகாலின் மயக்கும் அழகை வர்ணிப்பது கடினம். வார்த்தைகள் இதற்கு நியாயம் சேர்க்காது. இதன் கட்டிட நுணுக்கம், விரிவான வேலைப்பாடுகளும் காதல் மற்றும் கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்" என்று எழுதியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory