» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மகாராஷ்டிராவில் தேர்தலை முன்னிட்டு சோதனை : ரூ.52 கோடி பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 25, அக்டோபர் 2024 5:51:56 PM (IST)

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற வாகன சோதனைகளில் ரூ.52 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு), சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு), சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து மராட்டிய மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ.52 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மும்பை புறநகர், நாக்பூர் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் காவல்துறை, வருமான வரித்துறை, வருவாய் புலனாய்வு, போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, சுங்கம் மற்றும் கலால் ஆகிய துறையினர் மேற்கொண்ட சோதனைகளில் ரூ.52 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம் இதுவரை 1,144 தேர்தல் விதிமுறை மீறல் புகார்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 99 சதவீத புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம்தேதி தொடங்குகிறது: தர்மேந்திர பிரதான் தகவல்
வியாழன் 6, நவம்பர் 2025 3:58:42 PM (IST)

எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயில்: 8-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:33:53 AM (IST)

அரியானா வாக்காளர் பட்டியலில் புகைப்படம் : பிரேசில் மாடல் அழகி அதிர்ச்சி!
வியாழன் 6, நவம்பர் 2025 11:25:12 AM (IST)

உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண் பக்தர்கள் பலி!
வியாழன் 6, நவம்பர் 2025 8:38:12 AM (IST)

தொழிலதிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று மகன் தற்கொலை: குடிபோதையில் வெறிச்செயல்!
புதன் 5, நவம்பர் 2025 12:15:26 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு: மம்தா தலைமையில் பேரணி!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:43:30 PM (IST)




