» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை நியமனம் : பிரதமர் பெருமிதம்!
செவ்வாய் 29, அக்டோபர் 2024 5:27:34 PM (IST)
லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் பணி தொடர்ந்து நடக்கிறது' என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு வருகின்றன. ஹரியானாவில் பா.ஜ., அரசுக்கு என தனி அடையாளம் உள்ளது. ஹரியானாவில் புதிய அரசு அமைந்ததும் 26 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. எந்த செலவும் இல்லாமல் அரசு வேலை கிடைத்துள்ளது. குறிப்பாக, பணிநியமன ஆணை பெற்ற, ஹரியானா மாநில இளைஞர்களை வாழ்த்துகிறேன்.
இந்த பண்டிகை காலக்கட்டத்தில், 51 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டே நாட்களில், தீபாவளியைக் கொண்டாடுவோம். இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்தது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு, அயோத்தியில் உள்ள தனது பிரமாண்ட கோவிலில் ராமர் அமர்ந்திருக்கிறார். அவரது பிரமாண்டமான கோவிலில் கொண்டாடப்படும் முதல் தீபாவளியாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 15, அக்டோபர் 2025 5:05:42 PM (IST)

அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்புவோம்: பிரதமர் மோடி
புதன் 15, அக்டோபர் 2025 11:05:01 AM (IST)

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற கேள்வி
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:38:15 PM (IST)

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை எதிரொலி: டிஜிபிக்கு கட்டாய விடுப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:17:00 PM (IST)

பிரதமர் மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:40:03 PM (IST)

வருவாய் குறைந்ததால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி விருப்பம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:43:41 PM (IST)
