» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகாவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பொதுமக்கள் அதிர்ச்சி!

வெள்ளி 8, நவம்பர் 2024 5:24:32 PM (IST)



கர்நாடகாவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் பங்கராபேட்டை நகரில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கட்டிடம் இடிந்து விழுந்ததில் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் வெளிப்புறச் சுவர் சேதமடைந்தது. வீட்டில் இருந்த 3 பேரை தீயணைப்புத் துறையினர் வெளியேற்றினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory