» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சத்தீஸ்கர் வழக்கறிஞர் கைது!

செவ்வாய் 12, நவம்பர் 2024 5:30:20 PM (IST)

நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது பைசான் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நடிகர் சல்மான்கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் விடுத்தவர் மராட்டிய அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துது. அடையாளம் தெரியாத நபர் ரூ. 50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மும்பை பந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து அந்த அழைப்பு வந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் வசித்து வரும் முகமது பைசான் கான் என்ற வழக்கறிஞர்தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் அவரது வீட்டில் வைத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். முன்னதாக, கொலை மிரட்டல் அழைப்பு விடுக்கப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசியை ஏற்கனவே தொலைத்துவிட்டதாக அவர் போலீசாரிடம் கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory