» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

புதன் 13, நவம்பர் 2024 4:41:16 PM (IST)



டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சவுதிஅரேபியாவின் வெளியுறவு அமைச்சர் நேரில் சந்தித்து பேசினார்.

சவுதிஅரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை டெல்லியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சவுதிஅரேபியாவின் வெளியுறவு அமைச்சர் நேரில் சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற இந்தியா-சவுதிஅரேபியா மூலோபாய கூட்டமைப்பு கவுன்சிலின் 2-வது அரசியல், சமூகம், பாதுகாப்பு மற்றும் கலாசார ஆலோசனைக் கூட்டத்தில் இருநாட்டு அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர், இந்தியா-சவுதி அரேபியா இடையிலான இருதரப்பு உறவு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது எனவும், முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் வசிக்கும் சுமார் 26 லட்சம் இந்திய குடிமக்களின் நலன்களை பாதுகாப்பதில் சவுதி அரேபியா அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார். மேலும் கூட்டு ராணுவ பயிற்சிகள் மூலம் இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு வலிமையடைந்து இருப்பதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார். அதோடு, சவுதி அரேபியாவின் 'விஷன் - 2030' மற்றும் இந்தியாவின் 'விக்சித் பாரத் - 2047' ஆகிய இலக்குகளை அடைவதற்கு இரு நாட்டு தொழில் நிறுவனங்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கி வருவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory