» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடி விமானத்தில் கோளாறு: ராகுல் காந்தி ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு!!

வெள்ளி 15, நவம்பர் 2024 5:39:31 PM (IST)

ஜார்க்கண்ட்டில் பிரதமர் மோடி பயணம் செய்யவிருந்த விமானத்தில் கோளாறு எதிரொலியாக ராகுல் ஹெலிகாப்டருக்கு விமான கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கவில்லை. 

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனா். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய முகாமிட்டு இருந்தனா். பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரியில் இருந்து விமானம் மூலம் தலைநகர் டெல்லி திரும்ப இருந்தார். 

இந்நிலையில், பிரதமர் மோடி பயணம் செய்யவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் டெல்லிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்றது. அவர் விமான நிலையத்தில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது ராகுல் காந்தி புறப்பட இருந்த ஹெலிகாப்டருக்கு விமான கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஒரு மணி நேரம் அவர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் கழித்து அனுமதி கிடைத்தவுடன் புறப்பட்டு சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory