» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பீகார் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் கட்சி படுதோல்வி!
சனி 23, நவம்பர் 2024 3:53:37 PM (IST)
பீகார் இடைத் தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 4 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.
பீகார் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ராம்கார், தராரி, பெலகஞ்ச் மற்றும் இமாம்கஞ்சு ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.பீகாரில் புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கும் பிரபல அரசியல் ஆலோசகர் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டது. பிற கட்சிகளை வெற்றி அடைய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் தனது கட்சியை நிச்சயம் வெற்றி பெற செய்வார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. ஆனால் பீகாரில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்த்: பி.ஆர்.கவாய் பரிந்துரை!
திங்கள் 27, அக்டோபர் 2025 12:18:51 PM (IST)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: இந்தூர் வாலிபர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:49:58 PM (IST)

பிஹாரில் ஊடுருவல்காரர்களை எங்கள் அரசு வெளியேற்றும்: அமித் ஷா பிரச்சாரம்
சனி 25, அக்டோபர் 2025 5:38:13 PM (IST)

காவல்துறையினர் தொடர் பாலியல் வன்கொடுமை: கையில் எழுதி வைத்து மருத்துவர் தற்கொலை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:07:52 PM (IST)

பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 24, அக்டோபர் 2025 3:50:43 PM (IST)

ஆந்திராவில் பஸ் தீவிபத்தில் 20பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:39:54 AM (IST)




