» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொங்கல் நாளில் நடைபெறவிருந்த சி.ஏ. தோ்வு ஜனவரி 16-ஆம் தேதிக்கு மாற்றம்!

செவ்வாய் 26, நவம்பர் 2024 11:02:50 AM (IST)

பொங்கல் பண்டிகையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சி.ஏ. தோ்வு ஜனவரி 16-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் சி.ஏ. என்றழைக்கப்படும் பட்டயத் தணிக்கை படிக்கும் மாணவா்களுக்கான, அடிப்படைத் தோ்வுகள் (பவுண்டேசன் கோா்ஸ்), தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 28 மையங்களில் தோ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வுகள் பொங்கல் பண்டிகையான ஜன.14-ஆம் தேதியும், உழவா் திருநாளான 16-ஆம் தேதியும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் பண்டிகை தமிழகத்தின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதைக் கருத்தில் கொண்டு, தோ்வா்களுக்கு சிரமங்கள் இன்றி தோ்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இந்திய பட்டயத் தணிக்கையாளா் நிறுவனத் தலைவா் ரஞ்சித்குமாா் அகா்வால் ஆகியோருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், தேர்வு தேதிகளை மாற்றி இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொங்கல், மகரசங்கராந்தி ஆகிய பண்டிகைகள் ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், அன்றைய தினம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜனவரி 16-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory