» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி விபத்து: 2 குழந்தைகள் உட்பட 5 தமிழர்கள் பலி
செவ்வாய் 26, நவம்பர் 2024 12:17:21 PM (IST)
திருச்சூர் அருகே சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலைசாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அவ்வழியாக வரும் வகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. சாலைப்பணி நடைபெறும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்த பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லாரி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை போலீசார் கைதுசெய்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் குடிபோதையில் லாரியை இயக்கியது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏடிஎம் வாகன கொள்ளை வழக்கில் போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது : ரூ. 5.76 கோடி பறிமுதல்!
சனி 22, நவம்பர் 2025 4:57:44 PM (IST)

நீதியை நிலை நாட்ட எப்போதும் முயற்சித்தேன் : ஓய்வு பெறும் நாளில் பி.ஆர். கவாய் உருக்கம்
வெள்ளி 21, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

டிரம்ப் வராத தைரியத்தில் மோடி ஜி20 மாநாட்டுக்கு சென்றுள்ளார்: காங்கிரஸ் கிண்டல்!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:48:56 PM (IST)

சபரிமலை கோவிலில் தங்கம் அபகரிப்பு வழக்கு: மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. கைது!
வெள்ளி 21, நவம்பர் 2025 11:27:37 AM (IST)

பீகார் முதல் அமைச்சராக நிதிஷ் குமார் பதவிஏற்பு : பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!
வியாழன் 20, நவம்பர் 2025 4:38:12 PM (IST)




