» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 வீரர்கள் பலி!

வியாழன் 22, ஜனவரி 2026 3:45:41 PM (IST)

ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு - காஷ்மீரின் டோடா மாவட்டத்தின் பதேர்வா பகுதியில் இன்று பிற்பகலில் 17 ராணுவ வீரர்களுடன் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. பதேர்வா - சாம்பா செல்லும் சாலையில் கானி டாப் என்ற பகுதியில் 200 அடி பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 13 வீரர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 6 வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், காயமடைந்த 7 வீரர்கள் மேல்சிகிச்சைக்காக உதாம்பூர் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்துக்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் விரைந்துச் சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியரசு தினத்தையொட்டி ஜம்மு - காஷ்மீர் பகுதிகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory