» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெங்களூரு விமான நிலையத்தில் கொரிய பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: ஊழியர் கைது!

வியாழன் 22, ஜனவரி 2026 5:11:36 PM (IST)

கொரியாவில் இருந்து சுற்றுலா வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பெங்களூரு விமான நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/airportarre_1769082198.jpgஇந்தியாவில் சுற்றுலாவுக்காக வருகைதந்த கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சொந்த நாட்டுக்குப் புறப்படவிருந்தார். குடியேற்றத் துறை சோதனைக்குப் பிறகு விமானத்துக்குச் செல்ல தயாரான போது, அவரை அணுகிய விமான நிலைய ஊழியர் அஃபான் அகமது என்பவர், அவரின் உடமை பைகளில் சப்தம் வருவதாகவும் சோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவரை தனிப்பட்ட முறையில் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, கழிப்பறை பகுதி அருகே அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அப்பகுதியைவிட்டு உடனடியாக அகமது புறப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெங்களூரு விமான நிலைய காவல் துறையினரிடம் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட அகமதுவை கைது செய்து பெங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory