» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி!
வெள்ளி 27, டிசம்பர் 2024 12:00:17 PM (IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். தில்லி இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், மன்மோகன் சிங் இல்லத்துக்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மன்மோகன் சிங் மறைவையொட்டி, நாடு முழுவதும் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.