» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்த சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்பியவர் எம்ஜிஆர்: பிரதமர் புகழாரம்

வெள்ளி 17, ஜனவரி 2025 10:44:55 AM (IST)

"ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்பியவர் எம்.ஜி.ஆர்." என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

அதிமுக நிறுவனத்தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். பிறந்தநாளை யொட்டி, அவருக்கும் புகழ் சேர்க்கும் விதமாக வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முயற்சித்தவர். மக்களுக்காக எம்.ஜி.ஆர். மேற்கொண்ட முயற்சிகளால் நாங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டோம்." என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory