» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குஜராத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி; 37 பேர் படுகாயம்!
ஞாயிறு 2, பிப்ரவரி 2025 5:17:39 PM (IST)
குஜராத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலம் டாங் மாவட்டத்திலுள்ள பள்ளத்தாக்கில் ஆன்மிக சுற்றுலாவுக்குச் சென்ற பேருந்து, இன்று அதிகாலை 4.15 மணியளவில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஓட்டுநர், இரு பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவுடன் விரைந்த காவல் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.