» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரதமர் மோடி பயணிக்கும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மும்பை போலீஸ் விசாரணை
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:51:45 PM (IST)
பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தம நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டார். அவர் தனது பிரான்ஸ் பயணத்தை நேற்று முடித்துக்கொண்டு அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் மும்பை காவல் துறை கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட ஒருவர் பிரதமர் மோடியின் விமானத்தை தீவிரவாதிகள் தாக்கலாம் என எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த அந்த நபரை போலீசார் தங்கள் பிடியில் கொண்டு வந்தனர். என்றாலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், "மிரட்டலில் தீவிரத்தை கருத்தில் கொண்டு பிற புலனாய்வு அமைப்புகளுக்கும் தகவல் தெரிவித்து விசாரணையை தொடங்கினோம். ஆனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது பிறகு தெரியவந்தது" என்றனர்.
பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பரில், மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு ஒரு மிரட்டல் அனுப்பப்பட்டது, இரண்டு ஐஎஸ்ஐ முகவர்கள் தொடர்புடைய வெடிகுண்டு தாக்குதல் திட்டம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது. இது தவிர கடந்த ஆண்டு பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கண்டிவ்லியை சேர்ந்த ஷீத்தல் சவான் என்ற 34 வயது நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட் : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!
புதன் 24, டிசம்பர் 2025 10:41:10 AM (IST)

தங்க நகையின் மதிப்பில் 60 முதல் 65% வரை மட்டுமே கடன்: ரிசர்வ் வங்கி அதிரடி!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:24:15 AM (IST)

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி : பிரதமர் மோடி பெருமிதம்
திங்கள் 22, டிசம்பர் 2025 12:35:30 PM (IST)

நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு : டிசம்பர் 26ஆம் தேதி முதல் அமல்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:33:37 AM (IST)

அணுசக்தித் துறையில் தனியார்: மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:17:30 AM (IST)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

