» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி அறிமுகம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 3:36:04 PM (IST)
ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒன்றிணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய ஸ்ட்ரீமிங் தளத்தை இன்று அறிமுகப்படுத்தி உள்ளனர்.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக இந்த ஜியோ ஹாட்ஸ்டார் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் 60% பங்குகளை வைத்துள்ளது. டிஸ்னி 37% பங்குகளை வைத்துள்ளது.
இரண்டு தளங்களிலும் இருந்த ஓடிடி கண்டென்ட்டுகளை இனி ஒரே தளத்தில் பார்க்கலாம். தற்போது இதில் இருக்கும் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், லைவ் ஷோக்கள் போன்றவற்றை இலவசமாகப் பார்க்கலாம். இடையில் வரும் விளம்பரங்களை தவிர்க்க சந்தா கட்ட வேண்டியிருக்கும்.
இரு தளங்களிலும் ஏற்கனவே சந்தா கட்டியுள்ள பயனர்களுக்கு அவர்களின் சந்தா காலம் முடியும் வரை இந்த சேவை தொடரும். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் புதிதாக சந்தா கட்ட தேவையில்லை.
ஜியோ சினிமாவில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்க முடியும். ஆனால் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஐபிஎல் போட்டிகள் சந்தா முறைக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முதல் சில நிமிடங்களுக்கு பின் வீடியோ லாக்- இன் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சந்தா செலுத்தினால் மட்டுமே விளம்பரம் இன்றி அதிக குவாலிட்டியில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியும் என்பதால் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
புதிய பயனர்களுக்கு 149 ரூபாய் முதல் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. மொபைல் வெர்ஷனுக்கு ரூ. 149, சூப்பர் திட்டத்திற்கு ரூ. 299 மற்றும் விளம்பரம் இல்லாத பிரீமியம் திட்டத்திற்கு ரூ. 349 என மூன்று மாத கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டாரில் கூடுதலாக NBCUniversal Peacock, Warner Bros, Discovery, HBO மற்றும் Paramount ஆகிய சேனல்களின் படங்கள் மற்றும் தொடர்கள் இதில் காணக்கிடைக்கும்.
மேலும் IPL, WPL மற்றும் ICC நிகழ்வுகள் போன்ற முக்கிய கிரிக்கெட் போட்டிகளையும், பிரீமியர் லீக், விம்பிள்டன், புரோ கபடி மற்றும் ISL போன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளையும் இந்த தளம் ஸ்ட்ரீம் செய்யும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு: பாதுகாப்பு துறை அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 4:34:49 PM (IST)

அபுதாபி லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு: கோடீஸ்வரர் ஆன கேரள தொழிலாளி!
வியாழன் 8, மே 2025 12:16:16 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய் செய்தி வெளியிட்ட சீன அரசு ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்!
வியாழன் 8, மே 2025 11:12:21 AM (IST)

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி: உமர் அப்துல்லா பேட்டி
புதன் 7, மே 2025 3:41:28 PM (IST)

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியீடு
புதன் 7, மே 2025 12:54:12 PM (IST)

பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு விளக்கம்
புதன் 7, மே 2025 12:03:23 PM (IST)
