» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 17 ஆண்டுகளில் முதன் முறையாக ரூ.262 கோடி லாபம் ஈட்டி சாதனை!
சனி 15, பிப்ரவரி 2025 12:15:07 PM (IST)
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 17 ஆண்டுகளில் முதன்முறையாக, ரூ.262 கோடி என்ற அளவில் லாபம் ஈட்டி சாதனை படைத்து உள்ளது.
அரசு சார்பு நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2025-ம் நிதியாண்டிற்கான மூன்றாம் காலாண்டில் ரூ.262 கோடி அளவுக்கு லாபம் ஈட்டி உள்ளது. 2007-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக இந்த காலாண்டானது லாபம் ஈட்டி தந்துள்ளது.
நெட்வொர்க் விரிவாக்கம், நிர்வாக செலவுகளை குறைத்தலுக்கான முயற்சிகள் மற்றும் அனைத்து வர்த்தக பிரிவுகளிலும் வளர்ச்சி ஆகியவை நிறுவனத்திற்கு இந்த வெற்றியை பெற்று தந்துள்ளது. 4ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவது, ஆப்டிக் பைபர் உட்கட்டமைப்பை மேம்படுத்தியது மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தும் நிர்வாக நடவடிக்கைகள் இந்த வளர்ச்சியை அடைய உதவியுள்ளன.
இதனால், நிதியாண்டின் இறுதியில் (மார்ச் 31) நிறுவனத்திற்கான வருவாய் 20 சதவீதம் அதிகரிக்கும் என பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரான ராபர்ட் ரவி கூறியுள்ளார். பி.எஸ்.என்.எல். நிறுவனம், நாடு முழுவதும் 4ஜி சேவையை கொண்டு செல்லும் நோக்குடன் செயல்பட்டு வருவதுடன், குறிப்பிட்ட இடங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் திட்டமும் தயாராக உள்ளது.
நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் 4ஜி நெட்வொர்க்கை செயல்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இதற்கேற்ப, ரூ.6 ஆயிரம் கோடி கூடுதலாக நிதியுதவியாக வழங்குவதற்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்களின் ஆபாச ஏஐ வீடியோ, படங்களை நீக்க வேண்டும்: எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு கெடு!
சனி 3, ஜனவரி 2026 3:37:12 PM (IST)

இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனை வேலுநாச்சியார்: பிரதமர் மோடி புகழாரம்!
சனி 3, ஜனவரி 2026 11:06:20 AM (IST)

மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த விவகாரம்: உயிரிழப்பு 11 ஆக உயர்வு!
வெள்ளி 2, ஜனவரி 2026 5:05:35 PM (IST)

துரந்தர் திரைப்படத்திற்கு லடாக்கில் வரி விலக்கு : ஆளுநர் கவிந்தர் குப்தா அறிவிப்பு
வெள்ளி 2, ஜனவரி 2026 3:47:34 PM (IST)

நாடு முழுவதும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்.
வெள்ளி 2, ஜனவரி 2026 12:29:19 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா மத்தியஸ்தம்? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
வியாழன் 1, ஜனவரி 2026 11:24:39 AM (IST)


