» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேசிய கல்விக் கொள்கை: தமிழக அரசின் ஒப்​புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்!

புதன் 12, மார்ச் 2025 10:39:43 AM (IST)



பு​திய தேசிய கல்விக் கொள்கை தொடர்​பாக தமிழ்​நாடு கல்வி துறை அனுப்பிய ஒப்​புதல் கடிதத்தை மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.

இதுகுறித்து தர்​மேந்​திர பிர​தான் நாடாளு​மன்​றத்​தில் நேற்று பேசி​ய​தாவது: பிஎம்-ஸ்ரீ பள்​ளி​களை அமைப்​ப​தற்கு தமிழ்​நாடு ஒப்​புதல் அளித்​தது தொடர்​பாக நாடாளு​மன்​றத்தை நான் தவறாக வழிநடத்​தி​ய​தாக திமுக நாடாளு​மன்ற உறுப்​பினர்​களும், முதல்வர் ஸ்டா​லினும் என்​மீது குற்​றச்​சாட்டை சுமத்​தி​யிருந்​தனர். நாடாளு​மன்​றத்​தில் தெரி​வித்த கருத்​தில் நான் உறு​தி​யாக உள்​ளேன். கடந்த 2024-ம்​ ஆண்டு மார்ச் 15 தேதி​யிட்டு தமிழ்​நாடு பள்​ளிக்​கல்​வித்​துறை அனுப்​பிய ஒப்​புதல் கடிதத்தை பகிர்ந்து கொள்​கிறேன். ஒப்​புதல் தெரி​வித்​து​விட்டு பின்​னர் மறுப்பு தெரி​விப்​பது ஏன்?

திமுக நாடாளு​மன்ற உறுப்​பினர்​களும், முதல்வர் ஸ்டா​லினும் எவ்​வளவு பொய்​களை அடுக்​கி​னாலும் உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். தமிழ்​நாட்டு மக்​களின் ஏராள​மான பிரச்​சினை​களுக்கு திமுக தீர்வு காணவேண்​டி​யுள்​ளது. அதனை திசை திருப்​பும் உத்​தி​யாகவே மொழிகுறித்த பிரச்​சினையை அது கையில் எடுத்​துள்​ளது. தேசிய கல்விக் கொள்கை குறித்​த நிலைப்​பாட்​டில் ஏற்​பட்​டுள்ள இந்த திடீர் மாற்​றம் நிச்​ச​யம் அரசி​யல் லாபங்​களுக்​காக​வும், அதன் அரசி​யல் எதிர்​காலத்தை மீட்​டெடுப்​ப​தற்​காகவும் மட்​டும்​தான். திமுக அரசின் இந்த பிற்​போக்கு அரசி​யல், தமிழக மாணவர்​களின் வள மான எதிர்​காலத்​துக்கு மிகப்​பெரிய தீங்கு விளை​விப்​ப​தாக அமை​யும்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அரசி​யல் கண்​ணோட்​டத்​துடன் பார்க்க வேண்​டாம் என முதல்​வர் ஸ்டா​லினை அன்​புடன் கேட்டுக்​கொள்​கிறேன். அரசி​யல் லாபத்தை தவிர்த்து தமிழகத்​தில் உள்ள நமது குழந்​தைகள் நலனுக்கு முன்​னுரிமை தர வேண்​டு​கிறேன். இவ்​வாறு பிர​தான் பேசி​னார். இதனிடையே, தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘யுடிஐஎஸ்இ+ தரவுகளின் படி, 2018-19-ல் 65.87 லட்​ச​மாக இருந்த தமிழ்வழி மாணவர் சேர்க்கை 2023-24-ல் 46.83 லட்​ச​மாக குறைந்​துள்​ளது. ஐந்து ஆண்​டு​களில் 19.05 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மாணவர்​கள் தமிழ் வழி கல்​வியி​லில் இருந்து குறைந்​துள்​ளனர். 65 சதவீத மாணவர்​கள் இப்​போது ஆங்​கில வழி பள்​ளி​களில் மட்​டுமே உள்​ளனர். அதேசம​யம், தமிழ் வழி மாணவர் சேர்க்கை 54% (2018-19)-லிருந்து 36% (2023-24)-ஆக குறைந்​துள்​ளது.

அரசு பள்​ளி​களில் ஐந்தே ஆண்​டு​களில் ஆங்​கில வழி மாணவர் சேர்க்கை 3.4 லட்​சத்​திலிருந்து 17.7 லட்​ச​மாக 5 மடங்கு அதி​கரித்​துள்​ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 7.3 லட்சத்திலிருந்து குறைந்துள்ளது. இந்த புள்ளவிவரங்கள் ஆழமான மாற்றம் மற்றும் உண்மையான நிலையை பிரதிபலிக்கிறது. தமிழ் மீடியத்தில் சேர்வோர் எண்ணிக்கைதொடர்ந்து குறைந்து வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

முன்​ன​தாக, நேற்று முன்​தினம் மக்​களவை​யில் பேசிய மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தேசிய கல்விக் கொள்கை விவ​காரத்​தில் திமுக வேண்​டுமென்றே அரசி​யல் செய்​வ​தாக கடுமை​யாக விமர்​சித்திருந்தார். அப்​போது அவர் பயன்​படுத்​திய சில வார்த்​தைகளுக்கு திமுக எம்​.பி.க்​கள் கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தனர். இந்த விவ​காரம் தொடர்​பாக அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் மீது கனி​மொழி உரிமை மீறல் நோட்​டீஸும் வழங்​கி​னார். இதையடுத்​து, அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பேசும்​போது, ‘‘அந்த வார்த்​தைகளை திரும்ப பெற்​றுக் கொள்​கிறேன்’’ என்​றார். இதைத் தொடர்ந்​து, அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் குறிப்​பிட்ட வார்த்​தைகள் அவைக் குறிப்​பில் இருந்து நீக்​கப்​படு​வ​தாக மக்​களவை தலை​வர் ஓம் பிர்லா அறி​வித்​தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory