» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!
புதன் 12, மார்ச் 2025 11:25:07 AM (IST)
கர்நாடகாவில் பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதியம் வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து யஸ்வந்த்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சுளா கைப்பட எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்தது.
அதில் வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் ஆகியவை தான் முக்கியம் என்று நினைக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. நான் பணம், பெயர், புகழ் சம்பாதித்துவிட்டேன். ஆனால் நிம்மதி இல்லை. கடந்த சில நாட்களாக நான் நிம்மதி இழந்து தவிக்கிறேன் எனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை.எனது தற்கொலைக்கு நான் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கடித்தை கைப்பற்றிய போலீசார் அதை தடயவியல் ஆய்வு அறிக்கைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்!
புதன் 26, மார்ச் 2025 5:35:06 PM (IST)

அலாகாபாத் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதன் 26, மார்ச் 2025 11:49:52 AM (IST)

தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமையும்: இபிஎஸ் சந்திப்புக்குப் பிறகு அமித்ஷா நம்பிக்கை
புதன் 26, மார்ச் 2025 11:25:23 AM (IST)

தற்காப்புக் கலை பயிற்சியாளர் ஹுசைனி மறைவு: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல்!,
செவ்வாய் 25, மார்ச் 2025 5:07:23 PM (IST)

வடமாநில எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை? கலாநிதி வீராசாமி கேள்வி!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:01:17 PM (IST)

நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்தம் குறித்து திமுக நோட்டீஸ்!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:50:45 AM (IST)
