» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஹோலி பண்டிகை பேரணி: 10 மசூதிகளை திரையிட்டு மூட உத்தர பிரதேச அரசு உத்தரவு!
வியாழன் 13, மார்ச் 2025 12:48:47 PM (IST)

உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகை பேரணியின்போது 10 மசூதிகளை திரையிட்டு மூட அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
வட இந்தியாவில் ஹோலி பண்டிகை வரும் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் இஸ்லாமியர்கள் ஜும்ஆ தொழுகையை மேற்கொள்வார்கள். சுமார் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹோலி பண்டிகையும், ஜும்ஆ தொழுகை தினமும் ஒரே நாளில் வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உத்தர பிரதேச் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 'சவுபாய்' என்ற பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணிக்கான பாதையில் சுமார் 10 பள்ளிவாசல்கள் உள்ளன. அந்த 10 பள்ளிவாசல்களையும் திரையிட்டு மூடுவதற்கு உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சம்பல் காவல்துறை எஸ்.பி. சிரீஷ் சந்திரா கூறுகையில், "சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கும், இரு சமூகத்தினரும் தங்கள் பண்டிகைகளை முழு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுவதற்கு வசதியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு: மம்தா தலைமையில் பேரணி!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:43:30 PM (IST)

பொங்கல் பண்டிகைதோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதியுதவி: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:01:41 PM (IST)

அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 சகோதரிகள் உயிரிழப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 11:26:18 AM (IST)

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு: விரைவில் விசாரணை!
செவ்வாய் 4, நவம்பர் 2025 10:39:28 AM (IST)

தெரு நாய்கள் வழக்கில் நவம்பர் 7ம் தேதி தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு
திங்கள் 3, நவம்பர் 2025 12:48:51 PM (IST)

தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)




