» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பட்டியாலா சிறையிலிருந்து பி.ஆர் பாண்டியன் விடுவிப்பு: 5 நாள் சிறைவாசம் முடிந்தது!
திங்கள் 24, மார்ச் 2025 7:53:30 PM (IST)

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் 5 நாள் சிறைவாசம் முடிந்து பட்டியாலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும், சம்யுத்தா கிசான் மோர்ச்சா என்ற அரசியல் சார்பற்ற அமைப்பின் SKM (NP) தமிழக ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருபவர் பி ஆர்.பாண்டியன். இவர், கடந்த 19ஆம் தேதி சண்டிகரில் மத்திய அரசின் அழைப்பின் பேரில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிவராஜ் சவுகான், பிரகலாத்ஜோஷி, பியூஸ்கோயல் உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் குறித்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றார்.
காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட அவரை வழிமறித்த பஞ்சாப் மாநில காவல்துறையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களோடு வந்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகளை கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அன்று இரவே பட்டியாலா மத்திய சிறையில் தடுப்பு காவல் சட்டத்தின் அடிப்படையில் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் அடைக்கப்பட்டனர்.
5 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், இன்று காலை சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஓரிருநாட்களில் அவர் தமிழ்நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு சென்ற தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் காரணம் சொல்லப்படாமல் கைது செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அவருடன் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் பிடி.ஜானும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!
வெள்ளி 11, ஜூலை 2025 12:44:15 PM (IST)

இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர் விமர்சனம்!!
வெள்ளி 11, ஜூலை 2025 10:58:09 AM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 3 பேருக்கு தூக்குத்தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 11, ஜூலை 2025 8:23:20 AM (IST)

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வியாழன் 10, ஜூலை 2025 4:51:19 PM (IST)

ஏமனில் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் நிமிஷா : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வியாழன் 10, ஜூலை 2025 12:44:26 PM (IST)

மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை: பள்ளி முதல்வர், ஆசிரியைகள் உட்பட 8பேர் மீது வழக்கு
வியாழன் 10, ஜூலை 2025 12:23:40 PM (IST)
