» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அலாகாபாத் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதன் 26, மார்ச் 2025 11:49:52 AM (IST)

குழந்தையின் மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றத்தின் கீழ் வராது என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்ய இரு நபர்கள் முயற்சித்தது தொடர்பான வழக்கை அலாகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் விசாரித்தது. இந்த வழக்கில், குழந்தையின் மார்பகங்களைப் பிடித்து, அவரது பைஜாமாவின் நாடாவை அவிழ்த்தது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல என்று நீதிபதி ராம் மனோகர் நாராயணன் என்பவர் தீர்ப்பு வழங்கினார்.

இந்தத் தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த நிலையில், நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டபோது, ”இந்தத் தீர்ப்பை எழுதியவர் முற்றிலும் உணர்திறன் இல்லாததைக் காட்டுகிறது என்பது வேதனை அளிக்கிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தார். 

மேலும், இந்தத் தீர்ப்பு மனிதாபிமானமற்ற அணுகுமுறையைக் காட்டுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், தீர்ப்பை நிறுத்திவைப்பதாகவும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். அதேபோல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அலாகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பு சமர்ப்பித்து பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory