» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பட்டாசு ஆலை தீவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு: குஜராத்தில் சோகம்!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:20:13 PM (IST)

குஜராத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர். 

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா நகரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்தின் எதிரொலியாக அருகிலிருந்த பட்டாசு கிடங்கும் இடிந்து விழுந்துள்ளது. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த நிலையில், 200 மீட்டர் தொலைவுக்கு பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன. 

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். மீட்கப்படுபவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதுவரை 13 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பலர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும், அப்பகுதியில் உள்ள வயல்களில் மனித உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தொழிற்சாலையின் துப்பாக்கிப் பவுடர் தயாரிக்கும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டு பரவியிருக்கக் கூடும் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory