» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இலங்கையிடம் படகுகளை இழந்த மீனவர்களுக்கு என்ன நிவாரணம்?.. கனிமொழி எம்.பி. கேள்வி

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:14:12 PM (IST)

இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 200 படகுகள் நாட்டுடைமையாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்குமா? என கனிமொழி எம்.பி. எழுப்பினார்.

தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பேசினார். அப்போது; இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட 200 படகுகள் நாட்டுடைமையாக மாற்றப்பட்டுள்ளன. 

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு எம்.பி.; தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என இலங்கை அதிபர் கூறினார், ஆனால் உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது. மீனவர்கள் விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வை எட்டும் வகையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால்தான் அவர்களது உடைமைகளை இலங்கை அரசு பறிமுதல் செய்கிறது எனக் குறிப்பிட்டார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் லோக்சபாவில் இருந்து தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory