» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
செங்கோட்டைக்கு உரிமை கோரி பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 6, மே 2025 10:57:43 AM (IST)

டெல்லி செங்கோட்டைக்கு உரிமை கோரி பெண் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு தகுதியற்றது என்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுல்தானா பேகம் என்ற பெண் தாக்கல் செய்த மனுவில், "முகலாய பேரரசின் கடைசி மன்னர் பகதூர்ஷா சாபர், கடந்த 1857-ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் வீழ்த்தப்பட்டார். அவரது சொத்துகள் அனைத்தையும் கிழக்கிந்திய கம்பெனி சட்டவிரோதமாக எடுத்துக் கொண்டது.
இந்தயா சுதந்திரம் அடைந்த பிறகு, முகலாய பேரரசின் கடைசி வாரிசான மிர்சா முகமது பேதர் பக்திற்கு இந்திய உள்துறை அமைச்சகம் 1960-ம் ஆண்டு முதல் பென்சன் வழங்க தொடங்கியது. இந்நிலையில், 1980 மே 22-ந்தேதி மிர்சா முகமது பேதர் பக்த் காலமானதையடுத்து, அவரது மனைவி சுல்தானா பேகத்திற்கு 1980 ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் இந்திய அரசு பென்சன் வழங்கி வருகிறது. அந்த பென்சன் தொகை மிகவும் குறைவான அளவாக இருக்கிறது.
முகலாய வம்சாவளியை சேர்ந்தவரின் மனைவியான தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய டெல்லி செங்கோட்டையின் உரிமையை இந்திய அரசு தர மறுக்கிறது. இது அடிப்படை உரிமை மட்டுமின்றி அரசியலமைப்பு சட்ட உரிமை 300ஏ மற்றும் மனித உரிமையை மீறும் செயலாகும்" என்று கூறப்பட்டிருந்தது. எனவே, டெல்லி செங்கோட்டையின் உரிமையை தனக்கு வழங்க இந்திய அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, மிகவும் காலதாமதமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில், அவர் கல்வி அறிவு பெறாதவர் என்பதால், அவரால் சரியான நேரத்தில் கோர்ட்டை நாட முடியவில்லை என்ற காரணம் கூறப்பட்டது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள கோர்ட்டு மறுத்துவிட்டது. தொடர்ந்து அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி துஷார் ராவ் கடேலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். காலதாமதத்திற்கு மனுதாரர் தரப்பில் கூறப்பட்ட காரணங்களை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுல்தானா பேகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில், ஜாபரின் வாரிசு என்ற அடிப்படையில், ஜாபரிடம் இருந்து பறிக்கப்பட்ட டெல்லி செங்கோட்டையை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன்பு முன்வைக்கப்பட்டது. அப்போது, ''டெல்லி செங்கோட்டையை மட்டும் ஏன் கேட்கிறார்? ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி ஆகியவை வேண்டாமா?'' என்று மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு விசாரணைக்கு தகுதியற்றது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாண பெயிண்டைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு
சனி 3, மே 2025 5:51:36 PM (IST)
