» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண்கள் சமமாக அதிகாரம் பெற்றால்தான் ஒரு நாடு முன்னேற முடியும் : பிரதமர் மோடி
ஞாயிறு 8, ஜூன் 2025 8:12:08 PM (IST)

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது ஒரு சமூக மாற்றம் மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கான அத்தியாவசிய தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சியமைத்து 11 ஆண்டுகள் நிறைடைந்ததையொட்டி, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புத்தகம் வெளியிடப்பட்டது.
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து புத்தகத்தில் மோடி கூறியிருப்பதாவது; முன்பு பெண்கள் வீடுகளில் முடங்கி கிடந்த காலம் மாறி, நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுப்பவர்களாக உள்ளனர். 'நாரி ஷக்தி' எனும் திட்டமானது, நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் அதிகாரம் அளிக்க வழிவகை செய்கிறது. இதன்மூலம், பெண்கள் மதிப்பு, மரியாதை மற்றும் பாதுகாப்புடன் வாழ முடியும்.
இந்திய பெண்கள் பல தடைகளை எதிர்கொண்டனர். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளிட்டவற்றில் பின்தங்கியிருந்தனர். 2014ம் ஆண்டு மோடி பிரதமர் ஆன பிறகு, இவை அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் 67.7% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது ஒரு சமூக மாற்றம் மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கான அத்தியாவசிய தேவை. பெண்கள் சமமாக அதிகாரம் பெற்றால்தான் ஒரு நாடு முன்னேற முடியும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கச்சா எண்ணெய் விலை குறித்து தேவையற்ற கவலை வேண்டாம்: பெட்ரோலியத்துறை அமைச்சர்
வெள்ளி 20, ஜூன் 2025 12:06:15 PM (IST)

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் சூழல் விரைவில் உருவாகும்: அமித்ஷா பேச்சு
வெள்ளி 20, ஜூன் 2025 10:24:48 AM (IST)

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு: பயணிகள் அதிர்ச்சி!!
வெள்ளி 20, ஜூன் 2025 10:19:11 AM (IST)

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் ரிலீஸை தடுத்தால் வழக்குப் பதிவு: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 19, ஜூன் 2025 4:08:52 PM (IST)

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறப் போவதில்லை: தமிழக அரசு
வியாழன் 19, ஜூன் 2025 12:18:01 PM (IST)

ஆமதாபாத் விபத்து: ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
வியாழன் 19, ஜூன் 2025 11:30:43 AM (IST)
