» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் ரிலீஸை தடுத்தால் வழக்குப் பதிவு: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 19, ஜூன் 2025 4:08:52 PM (IST)

கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீசை தடுத்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம், ஜூன் 5ல் வெளியானது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'தமிழில் இருந்து உருவான மொழி கன்னடம்' என்று பேசியதால் கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தக் லைப் படத்துக்கு கர்நாடகாவில் தடை விதித்ததை எதிர்த்து மகேஷ் ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: திரைப்படம் வெளியாகும் போது வன்முறைகள் ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும். திரைப்படம் வெளியிடப்பட வேண்டும். அது உங்கள் கடமை. தியேட்டருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஒரு நடிகர் ஏதாவதுகூறினால் கூட உணர்வுகள் புண்படுகின்றன எனக்கூறி நாசவேலைகள் நடக்கின்றன, நாம் எங்கே எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்? நாளை இதே போன்று ஒரு நாடகத்துக்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுக்கக்கூடும். இதனை அனுமதிக்க முடியாது.
கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்'' என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:50:16 PM (IST)

வெற்றிகரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா : பிரதமர் மோடி வாழ்த்து!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:35:58 PM (IST)

பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:22:02 PM (IST)

காமராஜரின் உயரிய சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர் மோடி மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 10:18:29 AM (IST)

கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)

நிமிஷா விவகாரத்தில் எல்லைக்கு மீறி எதுவும் செய்ய முடியவில்லை: மத்திய அரசு தகவல்
திங்கள் 14, ஜூலை 2025 4:46:38 PM (IST)
