» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உ.பி., கோவில் கூட்டநெரிசலில் சிக்கி இருவர் பலி: பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் காயம்!
திங்கள் 28, ஜூலை 2025 3:13:45 PM (IST)
உத்தரப் பிரதேசத்தில் கோவிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் காயமடைந்தனர்.
பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஔசனேஷ்வர் மகாதேவ் கோவிலில் ஆடி மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமை முன்னிட்டு நீராடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அதிகாலை 2 மணியளவில் உயர் மின்னழுத்தக் கம்பியின் மீது குரங்குகள் குதித்ததில், அந்த கம்பிகள் அறுந்து கோவிலின் கொட்டகை மீது விழுந்துள்ளது. இதனால், மின்சாரம் பாயும் அபாயத்தில் பக்தர்கள் அங்கும் இங்கும் ஓடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உடனடியாக கோவில் வளாகத்தில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 2 மணிநேர பரபரப்புக்கு பின், பக்தர்கள் வரிசையில் நின்று வழக்கம்போல் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டு உபயோகப்பொருட்கள் அதிரடி வரிகுறைப்பு: ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்
வியாழன் 4, செப்டம்பர் 2025 10:59:36 AM (IST)

வங்கியில் கொள்ளைபோன ரூ.5 கோடி நகை, பணம் மீட்பு: ஊழியர் உள்பட 5 பேர் கைது
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:51:08 AM (IST)

தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கவிதா!
புதன் 3, செப்டம்பர் 2025 5:25:09 PM (IST)

சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை: மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி!
புதன் 3, செப்டம்பர் 2025 5:20:16 PM (IST)

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து மகள் கவிதாவை நீக்கிய சந்திரசேகர் ராவ்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:02:50 PM (IST)

ஆசிரியர்களுக்கு டெட் தகுதி தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:53:18 AM (IST)
