» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குழந்தைகளும், முதியவர்களும் ரேபிஸ் நோய்க்கு இரையாகி வருகின்றனர்: உச்சநீதிமன்றம் கவலை
திங்கள் 28, ஜூலை 2025 5:17:23 PM (IST)
நாய் கடியால் குழந்தைகளும், முதியவர்களும் ரேபிஸ் நோய்க்கு இரையாகி வருகின்றனர் என உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
நாய் கடியால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்பாக ஊடங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது. இந்த வழக்கு நீதிபதி பர்திவாலா, நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஒவ்வொரு நாளும், டெல்லியிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன, இது ரேபிஸ் நோய் பாதிப்புக்கு வழிவகுக்கிறது. குழந்தைகளும், முதியவர்களும் இந்த கொடூரமான நோய்க்கு இரையாகி வருகின்றனர்.
இந்த விவகாரம் மிகவும் அச்சுறுத்தக்கூடியது; ஆபத்தானது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு முன்பு, இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டு உபயோகப்பொருட்கள் அதிரடி வரிகுறைப்பு: ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்
வியாழன் 4, செப்டம்பர் 2025 10:59:36 AM (IST)

வங்கியில் கொள்ளைபோன ரூ.5 கோடி நகை, பணம் மீட்பு: ஊழியர் உள்பட 5 பேர் கைது
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:51:08 AM (IST)

தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கவிதா!
புதன் 3, செப்டம்பர் 2025 5:25:09 PM (IST)

சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை: மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி!
புதன் 3, செப்டம்பர் 2025 5:20:16 PM (IST)

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து மகள் கவிதாவை நீக்கிய சந்திரசேகர் ராவ்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:02:50 PM (IST)

ஆசிரியர்களுக்கு டெட் தகுதி தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:53:18 AM (IST)
