» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டிசிஎஸ் நிறுவனத்தில் 12ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்க விவகாரம்: கர்நாடக அரசு நோட்டீஸ்!
சனி 2, ஆகஸ்ட் 2025 3:19:47 PM (IST)

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் பணி நீக்க விவகாரம் தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் 2026-ம் நிதியாண்டில் தங்களது நிறுவனத்தில் 2 சதவீத பணியாளர்களை குறைக்க முடிவெடுத்துள்ளது. இதன் விளைவாக 12 ஆயிரத்து 200 ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறும்போது, "டிசிஎஸ் நிறுவனத்தின் திடீர் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. 12 ஆயிரம் ஊழியர்கள் என்பது மிகவும் பெரிய எண்ணிக்கை. இதனை தடுத்து நிறுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், டிசிஎஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுதவிர, அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தொழிலாளர் நல சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டு உபயோகப்பொருட்கள் அதிரடி வரிகுறைப்பு: ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்
வியாழன் 4, செப்டம்பர் 2025 10:59:36 AM (IST)

வங்கியில் கொள்ளைபோன ரூ.5 கோடி நகை, பணம் மீட்பு: ஊழியர் உள்பட 5 பேர் கைது
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:51:08 AM (IST)

தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கவிதா!
புதன் 3, செப்டம்பர் 2025 5:25:09 PM (IST)

சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை: மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி!
புதன் 3, செப்டம்பர் 2025 5:20:16 PM (IST)

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து மகள் கவிதாவை நீக்கிய சந்திரசேகர் ராவ்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:02:50 PM (IST)

ஆசிரியர்களுக்கு டெட் தகுதி தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:53:18 AM (IST)
