» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மினிமம் பேலன்சை ரூ.50,000 ஆக உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
சனி 9, ஆகஸ்ட் 2025 4:41:15 PM (IST)
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர மினிமம் பேலன்ஸ் ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும், தங்கள் வங்கிகளின் விதிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கைக்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றி அதனை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா, பஞ்சாப் நேஷனல் வங்கிகள் மினிமம் பேலன்ஸை உயர்த்தியது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ-யில் புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50 ஆயிரமாகவும், இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25 ஆயிரம், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10ஆயிரமாகவும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உயர்த்தி உள்ளது. இந்த விதிகள் கடந்த 1-ம் தேதியில் இருந்து புதிதாக கணக்கு தொடங்குபவர்களுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய MAMB தொடரும் என அறிவித்துள்ளது. பண பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்களையும் வங்கி மாற்றியுள்ளது. கிளைகள் மற்றும் பண மறுசுழற்சி இயந்திரங்களில் பண வைப்புகளுக்கு, வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும். அதன் பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 வசூலிக்கப்படும்.
மக்கள் கருத்து
இனிAug 9, 2025 - 08:01:50 PM | Posted IP 104.2*****
பிச்சை எடுக்க வேண்டியிருக்கும்
தமிழ்ச்செல்வன்Aug 9, 2025 - 04:49:47 PM | Posted IP 162.1*****
அடுத்து திவாலாகப் போகும் வங்கி இதுதான்....
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டு உபயோகப்பொருட்கள் அதிரடி வரிகுறைப்பு: ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்
வியாழன் 4, செப்டம்பர் 2025 10:59:36 AM (IST)

வங்கியில் கொள்ளைபோன ரூ.5 கோடி நகை, பணம் மீட்பு: ஊழியர் உள்பட 5 பேர் கைது
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:51:08 AM (IST)

தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கவிதா!
புதன் 3, செப்டம்பர் 2025 5:25:09 PM (IST)

சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை: மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி!
புதன் 3, செப்டம்பர் 2025 5:20:16 PM (IST)

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து மகள் கவிதாவை நீக்கிய சந்திரசேகர் ராவ்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:02:50 PM (IST)

ஆசிரியர்களுக்கு டெட் தகுதி தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:53:18 AM (IST)

M BabuAug 11, 2025 - 07:33:29 AM | Posted IP 162.1*****