» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆதாரை 12-வது ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
திங்கள் 8, செப்டம்பர் 2025 3:56:20 PM (IST)
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மால்யா அமர்வு முன்பாக இன்று(திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "பீகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி வாக்காளர்கள், ஆதார் அட்டையை ஒரு அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். எனினும் ஆதார் அட்டையின் நம்பகத் தன்மை மற்றும் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.
ஆதார், சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும் குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 23(4)-ன்படி ஆதார் ஒரு அடையாளச் சான்று. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, பிற 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்வது குறித்து தேர்தல் ஆணையம், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
ஆதார் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவை அச்சுறுத்த முயன்றால் வலுவான பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
வியாழன் 2, அக்டோபர் 2025 4:29:02 PM (IST)

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!
புதன் 1, அக்டோபர் 2025 12:30:59 PM (IST)

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!
புதன் 1, அக்டோபர் 2025 11:41:27 AM (IST)

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
புதன் 1, அக்டோபர் 2025 11:31:27 AM (IST)

காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயற்சி: பிரதமர் மோடி வரவேற்பு
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 4:51:50 PM (IST)

கரூர் துயர சம்பவம்: விஜய் உடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:25:52 AM (IST)
