» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயிலின் ஏசி பெட்டியில் பெட்ஷீட், கம்பளி போர்வைகளை திருடிய பயணிகள் சிக்கினர்

திங்கள் 22, செப்டம்பர் 2025 12:10:46 PM (IST)

டெல்லியில், ரயிலின் ஏசி பெட்டியில் படுக்கை விரிப்புகள், கம்பளி போர்வைகளை திருடிய பயணிகள் சிக்கினர்.

டெல்​லி- ஒடிசா புருசோத்​தம் எக்​ஸ்​பிரஸ் ரயி​லில் முதல் வகுப்பு ஏ.சி பெட்​டி​யில் பயணம் செய்த பயணி​கள் சிலர் படுக்கை விரிப்​பு, கம்​பளி ஆகிய​வற்றை தங்​கள் பைகளில் எடுத்​துச் சென்று சிக்​கினர். தொலை தூர ரயி​லில்​களில் தூங்​கும் வசதி கொண்ட ஏ.சி பெட்​டி​யில் பயணம் செய்​யும் பயணி​களுக்கு படுக்கை விரிப்​பு​கள், கம்​பளி ஆகியவை வழங்​கப்​படும்.

இரவில் தூங்​கும்​போது அவற்றை பயன்​படுத்​திய பின், பயணி​கள் அவற்றை தங்​கள் இருக்​கை​யில் வைத்து விட்டு செல்​வது வழக்கம். புரியி​லிருந்து டெல்​லிக்கு செல்​லும் புருசோத்​தம் எக்​ஸ்​பிரஸ் ரயி​லின் முதல் வகுப்பு ஏ.சி பெட்​டி​யில் ஒரு பெண்​ணும், 2 ஆண்​களும் பயணம் செய்​தனர். அவர்​கள் டெல்​லி​யில் இறங்​கும்​போது அந்த படுக்கை விரிப்​பு​களை​யும், கம்​பளியை​யும், மடித்து தாங்​கள் கொண்டு வந்த பைகளில் வைத்​துள்​ளனர்.

இதைப் பார்த்த ரயில் டிக்​கெட் பரிசோதகர் மற்​றும் உதவி​யாளர், அந்த பயணி​களிடம் படுக்கை விரிப்​பு​கள் மற்​றும் கம்​பளியை இது​போல் திருடு​வது நியா​யமா? என கேட்​டுள்​ளனர். அவற்றை திருப்பி கொடுங்​கள் அல்​லது ரூ.780 அபராதம் செலுத்​துங்​கள் என கூறி​யுள்​ளனர். அப்​போது அந்த பயணி​களில் ஒரு​வர், தனது தாய் தவறு​தலாக படுக்கை விரிப்பை மடித்து பையில் வைத்​து​விட்​டார் என கூறி சமாளித்​தார். அவர்​களை டிடிஇ மற்​றும் ரயில்வே உதவி​யாளர் ஆகியோர் எச்​சரித்து அனுப்​பினர்.இந்த வீடியோ சமூக ஊடகத்​தில் வைரலாக பரவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory