» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் அக்டோபர் 1-ம் தேதி உயருகிறது!

புதன் 24, செப்டம்பர் 2025 4:01:06 PM (IST)

வருகிற அக்.1ஆம் தேதி முதல் ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட உள்ளது.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில் ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம், அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்படுகிறது. பயோமெட்ரிக் (Biometric) மாற்றம் செய்ய, கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125-ஆக உயர்த்தப்படுகிறது.

புதிய ஆதார் பெற விண்ணப்பிப்போருக்கு கட்டணம் இல்லை. இந்த கட்டண உயர்வு, செப்டம்பர் 30, 2028 வரை இது அமலில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கக்கூடும் என்றாலும், உயர்வு மிகக்குறைந்த அளவில் மட்டுமே உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory