» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குஜராத்தில் சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.7,737 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு

சனி 18, அக்டோபர் 2025 5:40:55 PM (IST)

குஜராத்தில் 809 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய 9 அதிவிரைவு சாலைகளை கட்டமைக்க ரூ.5,576 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

குஜராத்தில் சாலைகள் மற்றும் கட்டிட துறைகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 124 திட்ட பணிகள் நடைபெறுவதற்காக முதல்-அமைச்சர் புபேந்திரா பட்டேல் ரூ.7,737 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்படி, 809 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய 9 அதிவிரைவு சாலைகளை கட்டமைக்க ரூ.5,576 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அதிக போக்குவரத்து நெருக்கடியான நிலையிலும், பாதுகாப்பு, வேகம் மற்றும் வசதி ஆகியவற்றை மேம்படுத்தி தரும் நோக்கில் இந்த திட்டம் அமையும்.

இதேபோன்று, பருவகாலத்திற்கு ஏற்ப மீள்தன்மையுடன் இருக்க கூடிய மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டுடன் கூடிய சாலைகளை குஜராத்தில் உருவாக்குவதற்காக ரூ.1,147 கோடிக்கு முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த திட்டத்தின்படி, 271 கி.மீ. தொலைவுக்காக மொத்தம் 20 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். இதுதவிர, மாநில சாலைகளின் மேற்புற தரம் மேம்படும் வகையிலான 803 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய 79 திட்டப்பணிகளுக்கு ரூ.986 கோடி நிதி ஒதுக்கவும் முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory