» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெள்ளி 7, நவம்பர் 2025 12:52:24 PM (IST)

பொது இடங்களில் சுற்றி திரியும் தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

நம் நாட்டில் தெருநாய்கள் குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரையும் விரட்டி விரட்டி கடித்து வருகிறது. இதில் குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் சமீபத்தில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்தது.

இதையடுத்து பத்திரிகைகளில் வெளிவந்த தெருநாய்கள் கடித்து இறந்தவர்கள் தொடர்பான செய்திகள் மற்றும் ரேபிஸ் வழக்குகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. ஜூலை 28 முதல் உச்சநீதிமன்றம் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. 

அதன்படி அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் தெருநாய்களுக்கு உணவு வழங்க கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதுமட்டுமின்றி தெருநாய்களை கண்டுபிடித்து தடுப்பூசி செலுத்தி கருத்தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்வி அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 

அப்போது பொது இடங்களில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் அருகே சுற்றி வரும் தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும். 8 வாரங்களில் வேலி அமைக்க வேண்டும். இங்கு பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்து பிற இடங்களில் விட வேண்டும். இதனை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory